Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு அதிரை பிறையின் அன்பான வேண்டுகோள்!

adirai chairmanஅதிரையில் கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் கொடிய டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் தண்ணீரிலும் கொசுக்கள் காணப்படுகிறது. மேலும் தற்போது சாலையொரங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே கிடக்கின்றன. இதனாலும் கொசுக்கள் அதிகரித்து  டெங்கு பரவ வாய்ப்புள்ளது.

மேலும் டெங்குவை தடுக்க கொசு மருந்து அடிப்பதையும் அவ்வப்போது ஒவ்வொரு தெருக்கள் வாரியாக பேரூராட்சி மூலம் அனுப்பலாம். டெங்குவை கட்டுப்படுத்தும் மருந்தான நிலவேம்பு கசாயத்தை பொதுமக்ளுக்கு தினமும் கிடைக்குமாறு அதிரை அரசு மருத்துவமனையிலோ அல்லது வேறு அரசு சார்ந்த அலுவலகங்களிலோ ஏற்பாடு செய்ய வேண்டும். நிலவேம்பு கசாயம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தான் கிடைக்கிறது. இதனை வாங்குவதற்காக மக்கள் 13 கி.மீ தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்கு செல்வது சாத்திமற்றது. அதிரையில் இயக்கங்கள் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டாலும் அது பெரும்பாலான ஆண்களுக்கும் வீட்டில் உள்ள பெண்களுக்கும் கிடைக்க வாய்ப்புகள் குறைவு.

எனவே அதிரை பேரூராட்சியில் டெங்குவை ஒழிக்க மேற்கூறியவற்றை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் உடனடியான நிறைவேற்றுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy