அதிரை கடற்கரைத் தெரு கந்தூரியில் புதிய திருப்பம்! இந்த ஆண்டு ஆபாச கச்சேரி நிகழ்ச்சி இல்லை! முஹல்லாவாசிகள் முடிவு!

kanthoori copyஅதிரை கடற்கரை தெருவில் உள்ள ஷேக் ஹாஜா அலாவுத்தீன் அவ்லியா தர்ஹாவில் கடந்த 500 அண்டுகளாக கந்தூரி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கொடியேற்றம், கூடு, கச்சேரி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். இந்த கந்தூரிக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிரையில் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது.

இதனை அடுத்து மக்கள் கூட்டம் செல்வது வருடா வருடம் குறைந்து வந்தது. இதனை நிறுத்திக்கொள்ள கூறி பல வருடங்களாக கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி இமாம் சபியுள்ளாஹ் மௌலானா ஜும்ஆ உரைகளிலும் தனிப்பட்ட முறையிலும் கோரிக்கை விடுத்து வந்தார். மேலும் சென்ற வருடம் அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பு கடற்கரைத் தெரு கந்தூரிக்கு எதிராக நோட்டிஸ் அடித்து ஜும்மா பள்ளிகளில் விநியோகம் செய்தது. அது போல் கடற்கரைத் தெரு முஹல்லா மற்றும் தீனுல் ஃஇஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம் ஆகிய அமைப்புகளும் கந்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதனை அடுத்து இந்த ஆண்டு கந்தூரிக்கான கொடிமரம் ஏற்றப்பட்டது. தற்போது மேற்கூறப்பட்ட கடற்கரைத்தெரு சார்ந்த அமைப்புகளின் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் கந்தூரி கமிட்டியினர் இந்த ஆண்டு ஆபாச நடன நிகழ்ச்சிகளை நிறுத்துக்கொள்வதாகவும், 12 மணிக்கும் கூடு ஊர்வலம் வராது எனவும் அனைத்து நிகழ்ச்சிகளும் 12 மணிக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த முடிவுக்கு இமாம் சபியுள்ளாஹ் மௌலானா அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் முஹல்லாஹ், அமீரக அமைப்பு, தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவற்றின் தொடர் பேச்சுவார்த்தைகளும் முயற்சிகளுமே காரணம்.

-அதிரை கடற்கரைத் தெரு முஹல்லாஹ்

செய்தி: அதிரை பிறை

Close