அதிரை புதிய பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்!

முன்னால் மத்திய இணை அமைச்சரும், முன்னால் தஞ்சை தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான திரு.S.S.பழனிமாணிக்கம் அவர்களால் அயிரை பேருந்து நிலையம் மற்றும் வனிக வளாகம் கட்டும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. பணிகள் துவங்கி ஏறக்குறைய 3 வருடங்களுக்கு மேல் அகிவிட்டாலும் ஆமை வேகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளால் இப்பேருந்து நிலையம் தற்போது தான் ஓரளவு முழுமையடைந்திருக்கிறது.

தற்போது ஈ.சி.ஆர் சாலையை ஒட்டியும், போஸ்ட் ஆபிஸ் சாலையை ஒட்டியும் உள்ள வணிக வளாகங்களின் பணிகள் முடிக்கப்பட்டு வெளிபுறச்சுவர்களுக்கு பச்சை-வெள்ளை வண்ணச் சாயம் பூசப்பட்டுள்ளது. ஏறக்குறைய பேருந்து நிலையப் பணிகள் ஓரளவு முடிந்து விட்டது. மீதம் உள்ள பணிகளி விரைந்து முடித்து பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Close