Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் மாணவர்களுக்கு நினைவாற்றல் திறனை அதிகரிக்க இலவச பயிற்சி – பைத்துல்மால் ரியாத் கிளை ஆலோசனை கூட்டத்தில் முடிவு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 28 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/11/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-

கிராத்                     : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் )

முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை          : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

சிறப்புரை              : சகோ.  A.M.அஹமது ஜலீல் (துணை செயலாளர்)

அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை     : சகோ. சாதிக் அஹமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:

1) அதிரை பைத்துல்மாலின் கடந்த 7 மாத அறிக்கையும் செயல்பாடும்  மிகவும் திருப்திகரமாக இருந்தது. மேலும், சிறப்பாக செயல்பட ரியாத் ABM அதிரை பைத்துல்மால் சார்பாக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) இல்மி (ILMI) அகடமி சார்பாக மாணவர்களுக்கு அறிவு மற்றும் நினைவாற்றல் (MEMORY POWER) திறனை மேம்படுத்துவதற்காக சிறப்பு பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பயிற்சியாளர் ஜனாப் அமீர் முத்தஸீர் (BANGALORE) நமதூரிலும் அழைத்து இலவச முறையில் 10th,+2  கல்லூரி மாணவர்களுக்கு வரும் டிசம்பர் (அரையாண்டு விடுமுறையில்) ஒரு முறை பயிற்சி அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக பைத்துல்மால் ஆலோசித்து தலைமையகதுக்கு பதில் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

3) நகைகடன் விசயமாக ஆலோசிக்கப்பட்டு அதற்கு தலைமையகம்  எடுக்கும் முயற்சிகள் வரவேற்க்கதக்கது . வரும் ஆண்டிலிருந்து நகைகடன் கொடுக்கும் முன் தாங்கள் பெறுபவரிடம்  குறிப்பிட்ட கால அளவில் கடனை திருப்பி செலுத்தா விட்டால் அவர்கள் செலுத்திய நகையிலிருந்து கொடுத்த தொகை போக மீதத்தை மட்டும் விற்பனை செய்து தருவோம் என ஒப்பந்தப்பத்திரம் (பதிவு பத்திரம்) மூலம் செய்து கொண்டால் வராக்கடனை முடிந்த அளவிற்கு தவிர்த்து கொள்ளளாம் என தீர்மானிக்கப்பட்டது

4) மேலும் ரியாத் சார்பாக வரும் ஆண்டுகளில் பென்சன் தொகை விசயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு அடுத்த அமர்வில் முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 11-ம் தேதி DECEMBER 2015 மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு  ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
… ஜஸாகல்லாஹ் ஹைர்…

மேலும் படங்கள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy