அதிரையர்கள் என்ன ஏமாளிகளா??? ஏமாற்றப்பட்ட அதிரை பயணியின் குமுறல்!!!

ADIRAI BAS

அதிரையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் சென்னையில் உள்ள தான் படிக்கும் கல்லூரிக்கு செல்வதற்காக அதிரையிலிருந்து சென்னை செல்லும் SETC அரசு பேருந்தில் சொகுசு (PUSH BACK) இருக்கைக்காக 240 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். இதனை அடுத்து மறுநாள் இரவு சென்னை செல்ல பேருந்தில் ஏறிய அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. பேருந்தில் கிழ்ந்த இறுக்கைகள், புஸ் பேக்கும் இல்லை ஒன்றும் இல்லை.

நடத்துனரிடம் கேட்டதற்க்கு அந்த பேருந்து சீர் செய்வதற்காக டிப்போவில் உள்ளது. இன்று இந்த பேருந்து தான் என நடத்துனர் தெனாவட்டாக கூறியுள்ளார். இதனை அடுத்து கோபமடைந்த அந்த மாணவர் நடத்துனரிடம் அப்படியென்றால் இதனை முன் கூட்டியே சொல்லியிருந்தால் குறைந்த கட்டணத்தில் சாதாரண இருக்கைக்கு டிக்கெட் எடுத்திருப்பேனே என கேட்டதற்கு அந்த நடத்துனர் அப்படி தான் செய்வோம் பிடித்தால் பஸ்ல வா..! இல்லை இறங்கி விடு…! என மரியாதனை குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இறுதியாக வேறு வழியின்றி அந்த பேருந்திலேயே சகித்துக்கொண்டு சென்னை வரை மிகவும் சிரமத்துடன் சென்றுள்ளார் அந்த அதிரையை சேர்ந்த கல்லூரி மாணவர்.

இப்படிதான் பல பேருந்து நடத்துனர்கள் தங்கள் பேருந்தில் ஏறும் பயணிகளிடம் மரியாதை குறைவான வார்த்தைகளால் திட்டுவது, வா போ என முதியவர்களை பேசுவது சில்லரை இல்லையென்றால் கடைசி வரை திட்டிக்கொண்டே அலக்களிப்பது, ஒரு ரூபாய்க்காக பத்து ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு மீது பணத்தை பயணிகளில் கொடுக்காமல் ஏமாற்றுவது என பல தரக்குறைவான காரியங்களில் ஈடுபடுகின்றார்கள்.

இவர்களை கேட்பதற்க்கு ஆள் இல்லை என்ற நிலையில் பல அப்பாவி பயணிகள் இந்த நடத்துனர்களால் ஏற்படும் பல்வேறு சஞ்சலங்களை சகித்துக்கொண்டு பயணம் செய்கின்றனர். இதற்கு வழிகான வேண்டும். நடத்துனர்கள் மேல் புகார் அளிக்க அதிக வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ஒரு முறை செய்தால் பணி இடை நீக்கமும், இரண்டு முறைக்கு மேல் இந்த நிலை தொடர்ந்தால் முழு பணி நீக்கமும் வழங்க வேண்டும். அப்பொழுது தான் நடத்துனர்கள் அஞ்சிக்கொண்டு பயணிகளிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்வார்கள். பயணிகளுக்கும் நல்லதொரு பயணமாக பேருந்து பயணம் அமையும்.

குறிப்பு: மேலுள்ள கட்டுரை அனைத்து நடத்துனர்களுக்கும் பொருந்தாது. பல நல்ல நடத்துனர்கள் இந்த தொழிலை சேவையாக நினைத்து செய்கிறார்கள்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர்

Close