Adirai pirai
islam sports இந்தியா தமிழகம்

ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் அசத்தி வரும் தொண்டி வீரர் செய்யது

SYEDமுதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த‌ சேர்ந்த கிரிக்கெட் வீரர் இந்திய அளவில் நடைபெறும் ரஞ்சி கோப்பையில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார். சென்னையில் வசித்துவரும் கிரிகெட் வீரர் செய்யது முஹம்மது இவர் வறட்சி மாவட்டமாக அறியப்படும் ராமநாதபுரம் மாவட்டம் சொந்த ஊர் தொண்டி புதுப்பட்டிணத்தை பூர்வீகமாக கொண்டவர். த‌ற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பையில் அஸ்ஸாம் அணிக்காக  விளையாடி வருகிறார்.

பல ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இடதுகை சுழற் பந்து வீச்சளாரான இவர் பேட்டிங்கிலும் சிறந்து விளங்குகிறார். 2006ல்தமிழக அணிக்காக விளையாடியுள்ளார். 2007- 2009 வரை சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 2011லிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருவதோடு அஸ்ஸாம் அணியிலும் இடம் பெற்று தற்போது ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். சென்னையில் பள்ளி படிப்பை நிறைவு செய்து சென்னை மண்ணடி பகுதியில் வசித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது நடைபெற்று வரும்  ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 6போட்டிகளில் பங்கேற்று ரன்கள் குவித்ததோடு 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கர்நாடக அணிக்கு அணிக்கு எதிராக 7/44 என்ற அளவில் ஒரே போட்டியில் அதிக பட்ச விக்கெட்களை வீழ்த்தி மேன் ஆப் தி பிளேயர் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy