அதிரை நெசவு தெருவில் தாழ்வான நிலையில் செல்லும் ஆபத்தான மின்கம்பிகள் (படங்கள் இணைப்பு)

nesavu

அதிரை நெசவுத்தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் உயர் மின்அழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. இதற்கு காரணம் இரண்டு மின்கம்பங்களுக்கு இடையிலான தூரம் சற்று அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிரை மின்வாரியத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்கிறார் அந்த தெரு வாசி.

எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close