லாரல் பள்ளி மாணவர்கள் ஓவியப்போட்டியில் சாதனை

laurelஅகில இந்திய மாணவர் வளர்ச்சி சமூகத்தால் தேசிய அளவிலான கையெழுத்து மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி மகாராஷ்ட்ரா மாநிலம் ஔரங்கபாத்தில் நடந்தது. இதில் பட்டுக்கோட்டை அடுத்த பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவர் சிவா, 9ம் வகுப்பு மாணவர் கோகுல் ஆகியோர் சிறந்த வண்ணம் தீட்டுதலுக்கான “கலா கவுரவ் அவார்டு“ வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் சந்திரசேகரன், துணை முதல்வர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள், ஓவிய ஆசிரியர் கேசவனை தாளாளர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் பள்ளி இயக்குனர்கள் எலிசபெத் தேவாசீர்வாதம், கே.பாரத் ஆகியோர் பாராட்டினர். தலைமையாசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Close