அதிரையில் பத்திரிக்கை பயிலரங்கம்!

imageபத்திரிக்கை துறையை மேம்படுத்துவதன் மூலம் சமூகத்தை சக்திப்படுத்துவது என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் “எக்ஸ்பிரஸ் மீடியா டிரஸ்ட்”,  இத்துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களை இனம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கும் பணியினை அதிரையில்  துவக்கியுள்ளது.
இதன் ஒருபகுதியாக அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு பிரபல பத்திரிகையாளர்களை வைத்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்து, எதிர்வரும் டிசம்பர் 26ஆம் தேதி  முகாமினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் பத்திரிக்கை துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஒருநாள் நிழ்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இம்முகாமில், செய்திகளை எவ்வாறு சேகரிப்பது? திரட்டப்பட்ட தகவல்களை சிறந்த முறையில் எழுதுவது எப்படி? என்பன உள்ளிட்ட செய்தியாளர்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள் அனைத்தும் செயல்முறை பயிற்சியாக வழங்கப்படவுள்ளது. மேலும் முகாம் நடைபெறும் இடம் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Close