அதிரையை எட்டிப்பார்த்த குட்டி மழை!

arabicஅரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வால், தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு மீண்டும் கன மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் பெய்த மழை பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் விடுக்கப்பட்டு உள்ள கன மழை எச்சரிக்கையால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.வங்கக் கடலில் ஏற்பட்ட காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், நேற்றுடன் முடிந்த, ஒரு வாரத்தில், சென்னையில் மிக அதிகபட்சமாக, 44 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், 25 மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதல் மழை பெய்தது.சென்னை, கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

சென்னை, புறநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் நேற்று வரை வடிந்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடலில் லட்சத் தீவு அருகே, புதிதாக காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அதிரையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யாமல் இருந்த நிலையில் இன்று மதியம் மேகமூட்டத்துடன் லேசாக இரண்டு  முறை எட்டிப்பார்த்தது.

Close