நம்ம ஊரு செக்கடி குளமா இது??(அழகிய படங்களுடன்…)

dot colorsஅதிராம்பட்டினம், நவம்பர் 20: அதிரையை கடந்து செல்லும் நசுவினி ஆற்றுத்தண்ணீர் பல ஆண்டுகளாக அதிரையை அடுத்துள்ள கடலில் வீனாக கலந்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் பல சமுக ஆர்வலர்கள் அதனை நமதூர் குளங்களுக்கு திருப்புமாறு கோரிக்கை வைத்தனர். இதனை அதிரை சேர்மன் அஸ்லம் நடைமுறைப்படுத்த கடந்த பல மாதங்களாக முயற்சி செய்து வந்தார். இதற்கு பலனளிக்கும் விதமாக இந்த தண்ணீர் பம்பிங் முறையில் அதிரை சி.எம்.பி வாய்க்கால் மூலமாக நீர் பெறும் குளங்களான ஆலடிக் குளம், புள்ள குளம், மரைக்கா குளம், கரிசல்மணி குளம், செக்கடிக் குளம், காட்டுக்குளம் போன்றவற்றுக்கு திருப்பப்பட்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை ஆலடிகுளம் முழுவதுமாக நிறப்பப்பட்டு அடுத்ததாக செக்கடிக் குளத்திற்கு தண்ணீர் சில நாட்களுக்கு முன்னர் திறந்துவிடப்பட்டது. தற்போது செக்கடிக் குளம் முழுவதுமாக தண்ணீர் ததும்ப ததும்ப காட்சியளிக்கிறது.

இந்த தண்ணீருடன் சில மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட நடைபயிற்சி மேடையும் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பூங்காவின் வண்ணப் பூக்களும், கம்பீரமாக தோற்றமளிக்கும் செக்கடிப் பள்ளியும் அழகுக் மேல் அழகூட்டுகின்றன.

முக்கிய குறிப்பு: தண்ணீர் அதிகமாக இருப்பதால் பூங்காவில் விளையாட குழந்தைகளை பெற்றொர், பெரியவர்களின் பாதுகாப்பு இல்லாமல் அனுப்ப வேண்டாம் என அதிரை பிறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்தி மற்றும் படங்கள்:நூருல் இப்னு ஜஹபர் அலி (ஆசிரியர், அதிரை பிறை)
Close