அதிரை கார், வேண், டெம்போ உரிமையாளர்கள் சங்கம் SDPI கட்சியின் SDTU வுடன் இணைப்பு (படங்கள் இணைப்பு)

sdtuஅதிராம்பட்டினம், நவம்பர் 21: அதிரை பேருந்து நிலைய கார் மற்றும் வேண் உரிமையாளர்கள் சங்கமும், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய டெம்போ உரிமையாளர்கள் சங்கமும் SDPI கட்சியின் ஒரு அங்கமான SDTU கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் இணைப்பு விழா நேற்று மாலை 4:30 மணியளவில் அதிரை ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு SDTU மாநில துணைத்தலைவர் திருச்சி சம்சுத்தீன் அவர்களும் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் Z.முஹம்மது இலியாஸ் அவர்களும், SDTU வின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பட்டுக்கோட்டை அமானுல்லா அவர்களும், SDPI கட்சியின் நகர துணைத் தலைவர் நடராஜ் அவர்களும்,SDPI கட்சியின் நகர செயலாளர் இக்பால் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இவர்கள் முன்னிலையில் அதிரை பேருந்து நிலைய கார் மற்றும் வேண் உரிமையாளர்கள் சங்கமும், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய டெம்போ உரிமையாளர்கள் சங்கமும் SDPI கட்சியின் தொழிலாளர் யூனியனாகிய SDTU வுடன் இணைக்கப்பட்டன. இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு அதிரை பேருந்து நிலைய கார் மற்றும் வேண் உரிமையாளர்கள் சங்கமும், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய டெம்போ உரிமையாளர்கள் சங்கமும் SDTU விடம்,

“அதிரை பேருந்து நிலையத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் கார்கள், வேண், டெம்போக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் RTO ஆகியோர் காலி செய்ய சொன்னதாகவும், இதனை அடுத்து இவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த காதிர் முகைதீன் பள்ளி அருகாமையில் முத்தம்மள் தெரு எதிர்புரமாக நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி தந்ததாகவும் அதற்கு முத்தம்மாள் தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதற்கு பேரூராட்சி நிர்வாகமும் எந்தவொரு தீர்வும் சொல்லாமல் இருப்பதாகவும் இதனால் தங்கள் வாகங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் தவிப்பதாகவும் தங்கள் வாழ்வாதார பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்த வேண்டும்”

என்ற கோரிக்கையை மாநில துணைத் தலைவர் சம்சுத்தீன் அவர்கள் முன் எடுத்து வைக்கப்பட்டது. இதனை கேட்ட அவர் இந்த கோரிக்கையை மாநில நிர்வாகத்திடம் கொண்டு சென்று இதற்கு தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

Close