அதிரையில் சாலை விபத்து! படுகாயமடைந்த பிலால் நகர் வாலிபர்!

ACCIDENTஅதிராம்பட்டினம், நவம்பர் 21: அதிரை பேருந்து நிலையம் அருகே ஈ.சி.ஆர் சாலையில் எதிரே வந்துக்கொண்டிருந்த கார் மீது பைக் மோதியது. அதிரை பிலால் நகரை சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்த இவரை அக்கம்பக்கத்தினர் ஆட்டோ மூலம் அவசரமாக அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

பலத்த காயம் என்பதால் தஞ்சைக்கு இவரை அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசென்றனர்.

மக்கள் கூடும் பரபரப்பான இடத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வாகன விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது அதிரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Close