அதிரை பிறை நடத்தும் “நேருக்கு நேர்” LIVE கேள்வி பதில் நிகழ்ச்சி விரைவில்…

neruku ner by adirai pirai.in

அதிரை மக்களின் மனதில் உள்ள கேள்விகளை, சந்தேங்களை கேட்டு தெளிவு பெறுவதற்காகவும் அதிரை பிறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட களம் தான் இந்த நேருக்கு நேர் நிகழ்ச்சி. தொலைக்காட்சிகளில் காணப்பட்ட இது போன்ற நிகழ்ச்சி முதன் முறையாக நமதூர் ஊடகமான நமது அதிரை பிறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் முதல் EPISODE இல் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் கலந்துக்கொண்டு பதில் அளிக்க உள்ளார்கள்.

நிகழ்ச்சி குறித்த விளக்கம்:

நமதூர் மக்கள் அதிரை பேரூராட்சி குறித்த செயல்பாடுகளை பேரூராட்சி தலைவரிடம் தொலைப்பேசி மூலமாக நமது நேருக்கு நேர் நேரலை கேட்டு அறிந்துக்கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். வெளிநாட்டில் உள்ள அதிரையர்கள் மெயில் முலமாக முன் கூட்டியே editor@adiraipirai.in என்ற ஈ-மெயில் ஐடிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டும்.

குறிப்பு: உங்கள் கேள்விகள் தனி நபரை தாக்கும் விதத்திலொ, தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ அல்லாமல் பேரூராட்சியின் செயல்பாடுகள் குறித்தும் புகார்கள் குறித்தும் கேட்டு தெளிவுபெறலாம்.

நிகழ்ச்சி குறித்து நாளும், நேரமும் விரைவில் அறிவிக்கப்படும்.

உங்கள் கேள்விகளை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்…

Close