அதிரையில் ரேசன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி தீவிரம்!

ரேஷன் கார்டில் 2015ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி இன்று காலை முதல்  அதிரையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடங்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு ரேசன் கடையிலும் சுழற்ச்சி முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அதிரையில் அனைத்து ரேசன் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ரேசன் கார்டுக்கு 2015ம் ஆண்டுக்கான உள்தாளினை ஒட்டிச் செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. தமிழகத்தில் 2005ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டை மக்கள் பயன்படுத்தி வருவதால், அவை கிழிந்து தொங்கும் நிலையில் உள்ளது. மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதால் புதிதாக ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement

Close