திருச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

iuml 1திருச்சி, நவம்பர்-24: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணியளவில் திருச்சியில் துவங்கி நடைபெற்றது. இதில் அதிரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளான கே.கே.ஹாஜா நசுருத்தீன், அப்துல் காதர், வழக்கறிஞர் அப்துல் முனாப், மனிச்சுடர் நிருபர் ஷாகுல் ஹமீது ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட மாநில தலைமை நிர்வாகிகள் விபரம்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை மீண்டும் தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும்,

மாநில பொதுச்செயலாளராக கே.ஏ.எம்.அபூபக்கர் அவர்களும்,

மாநில பொருளாளராக எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் அவர்களும்

மாநில ஹஜ் மற்றும் வக்புப்பணி செயலாளராக அல்ஹாஜ் கே எம் நிஜாமுதீன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

Close