அமெரிக்காவிடம் 100 கோடி இழப்பீடு கேட்கும் மாணவர் அஹமது முஹம்மது!

AHMED-MOHAMEDஅமெரிக்காவில் சொந்தமாகக் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்த போது கைது செய்யப்பட்ட முஸ்லீம் மாணவர் ரூ. 100 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் பயிலும் அகமது முகமது, சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்ட அவர், பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு கடிகாரத்தைச் செய்து, அதனை  வகுப்புக்குக் கொண்டு வந்து ஆசிரியரிடம் காட்டியுள்ளார்.

ஆனால் அது வெடிகுண்டு எனக் கருதி, ஆசிரியர்கள் பள்ளிக் காவலரை அழைத்தனர். அவரும், அகமதைக் கைது செய்து இரு கைகளுக்கும் விலங்கிட்டு கைது செய்தனர். இச்செயல் அமெரிக்கா மட்டுமல்லாது உலக முழுவதும் அதிரவலைகளை ஏற்படுத்தியது.

அகமது முகமதுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்த அதிபர் ஒபமா, அவருக்கு விருந்து அளித்து கௌரவித்தார்.

இந்நிலையில், அகமது முகமது அனுப்பியுள்ள நோட்டீஸில் இர்விங் மாநகர நிர்வாகம் 10 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அகமது பயின்ற பள்ளி நிர்வாகம் 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கவும் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 99.55 கோடி) அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர்கள் எழுத்துபூர்வமான மன்னிப்பு கடிதமும் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Close