பாசமான ஷக்கீல் டாக்டர் அவர்களுக்கு நேசமான அதிரை மக்களின் அன்பான கோரிக்கை

shakeel

ட்டுக்கோட்டை சின்னையா தெருவில் அமைந்துள்ளது ஷபானா மருத்துவமனை. மருத்துவர் ஷக்கீல் அவர்கள் அவர்கள் இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறார்கள். பொது மருத்துவம், சர்க்கரை நோய் சிறப்பு நிபுனராகவும், இதய பரிசோதனை நிபுனராகவும் உள்ளார். சகல நோய்களுடன் வரும் மக்களையும் தனது கைத்தேர்ந்த மருத்துவத்தால் குணப்படுத்தி வருவார். இதனால் சுற்றுவட்டாரத்தில் மிகவும் நம்பிக்கைக்குறிய மருத்துவராக உள்ளார்.

இதனால் அதிரை, முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிப்பட்டினம் போன்ற பல ஊர்களில் இருந்து மக்கள் நாள்தோரும் இவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக வருகை தருகின்றனர். இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு வர முதல் நாள் இரவு அலைப்பேசி மூலம் மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு டோக்கன் பதிய வேண்டும். இந்த அலைப்பேசி டோக்கன் முறையில் குறைந்த நேரத்துக்குள் அனைத்து டோக்கங்களும் தீர்ந்து விடுகின்றன.

இதனால் பல நோயாளிகளுக்கு அடுத்த நாள் சிகிச்சைக்கு டோக்கன் கிடைக்கவில்லை. இதனை அடுத்து நேரில் முதல் நாள் அதிகாலையிலெயே மருத்துவமனைக்கு சென்று தங்கள் இயலாமையை எடுத்துரைத்தாலும் கூட கண்டிப்பாக யாரை அனுப்பாமல் நாளை தொலைப்பேசியில் டோக்கன் பதிந்து விட்டு வாருங்கள் என செவிலியர்கள் கூறி விடுகிறார்கள். இதனால் பல தூரம் அதிரையிலிருந்து பேருந்து, கார், ஆட்டோ மூலமாக வந்து செல்லும் அதிரை மக்களுக்கு பண வீன் விரையமும் அதற்கும் மேலாக உடல் சுகவீனமும் ஏற்படுகிறது.

தங்களை நாடுவரும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கண்ணியத்திற்குறிய டாக்டர் ஷக்கீல் அவர்கள் பலருக்கு உடன்பாடில்லாத இந்த தொலைப்பேசி டோக்கன் முறையை படிபடியாக குறைத்து நேரடியாக டோக்கன் வழங்கும் முறையை பரிசீலனை செய்து மாற்றி அமைக்குமாறு பாசமான உங்கள் அதிரை மக்களின் சார்பாக அதிரை பிறை மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

Close