அதிரை பிறையின் பல வருட கோரிக்கைக்கு பலன்! ஆபத்தான சேர்மன் வாடி மின்கம்பம் மாற்றம்! (படங்கள் இணைப்பு)

ebஅதிராம்பட்டினம், நவம்பர் 26: அதிரை சேர்மன் வாடி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் லாரி ஒன்று அங்குள்ள மின்கம்பம் ஒன்றின் மீது மோதியது. இதில் அந்த மின்கம்பம் பயங்கரமாக சேதமடைந்து சாலையை நோக்கிய வலைந்தவாறு இருந்தது. இதன் காரணமாக இப்பகுதியை கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனமும் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்து அதிரை பிறை  யில் கடந்த மூன்று ஆண்டுகளில் 20க்கு மேற்பட்ட முறை செய்திகள் பதிந்தோம். அதுபோல் இஸ்லாமிய ஜனநாயக முன்னனி சார்பாகவும், சமுக ஆர்வலர்கள் பலரும் இந்த் கோரிக்கையை முன்வைத்தனர். இது குறித்து அதிரை A.E பிரகாஷ் அவர்கள் கூறுகையில் இன்று காலை  இந்த ஆபத்தான மின்கம்பத்தை எதிர் திசையில் சிமெண்ட் கம்பமாக மாற்றப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி அதிரை ஆனைவிழுந்தான் குளம் அருகாமையில் உள்ள மின்கம்பமும் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது. இது குறித்து பல முறை உங்கள் அதிரை பிறையில் உள்ள செய்திகளை பல முறை பார்த்துள்ளேன், இதற்கு இன்று தான் விடுவுகாலம் பிறந்துள்ளது, இதனை மாற்றுவதால் அதிரையில் சில மணி நேரம் மின்சாரம் தடைசெய்யப்படும் என்றார்”.

Close