அதிரையில் மறைந்த வார்டு கவுன்சிலர் அப்துல் காதர் அவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னால் மத்திய இணை அமைச்சர் பழனிமானிக்கம்! (படங்கள் இணைப்பு)

palanimanichamஅதிராம்பட்டினம், நவம்பர் 26: அதிரையில் நேற்று முந்தினம் இரவு 13 வது வார்டு கவுன்சிலரும் திமுக அவைத்தலைவருமான அப்துல் காதர் அவர்கள் வஃபாத்தானார்கள். அன்னாரின் உடல் நேற்று லுஹர் தொழுகைக்கு பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்று இரவு 8 மணிக்கு முன்னால் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள் அன்னாரின் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இவர்களுடன் தி.மு.க நகர் தலைவர் இராம.குணசேகரன், தி.மு.க வார்டு கவுன்சிலர்கள் சரீப், அன்சர்கான், “நூர்லாட்ஜ்” செய்யது, மற்றும் தி.மு.க நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Close