அதிரை செக்கடி குளத்தில் உற்சாக குளியலும், பரவும் அரை ஆடை படங்களும்!!!

jjjஅஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ் இந்த வருடம் நல்ல மழையை பொழிய வைத்து குளங்கள் நிரம்பி வழிகிறது. மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்… அல்ஹம்துலில்லாஹ். இந்த மகிழ்வான தருணத்தில், கண்டிக்கப்பட வேண்டிய தகவலையும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவனாக பதிவு செய்ய விரும்புகிறேன்..

அரைநிர்வானத்துடன் குளத்தில் குளித்த நம் சகோதரர்களை புகைப்படம் எடுத்து அன்னியப் பெண்களும் பார்க்கும் பொது தலங்களில் பதிவதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு ஆண்கள் அரைநிர்வான புகைப்படம் எடுத்து பொதுவில் பதிவது சரியா? என்பதை புகைப்படங்கள் வெளியிடும் சகோதரர்கள் ஊரில் உள்ள உலமாக்களிடம் கேட்டுவிட்டு பதியுங்கள்..

அல்லாஹ் நமக்கு கொடுத்த ரஹ்மத் இந்த மழையும், குளத்தில் உள்ள தண்ணீரும். நான் குளத்தில் குளிப்பதை தவறு என்று சொல்லவில்லை. குளியல் என்ற பெயரில் அரைநிர்வானத்துடன் இருபாலார் பலரும் பார்க்கும் பொதுவில் புகைபடமாக வெளியிடுவது மார்க்க வரம்புகள் மீரும் செயல். Facebook Whatsup adiraiblogs இவைகள் ஆண்கள் மட்டும் பார்க்கும் தளமல்ல. அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..

அல்லாஹ் கொடுத்த மழையின் மூலம் நிரம்பியுள்ள குளங்களில் குளிக்கும் சிலரின் அரைகுறை ஆடை புகைப்படங்கள் பொதுவில் பதிவதும் இதை வைத்து பெருமை அடிப்பதும் அனாச்சாரம். அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என் அன்பு சகோதரர்களே.

courtesy: https://www.facebook.com/tjdn77?fref=ts

Close