அதிரை மேலத்தெருவில் தாழ்வான நிலையில் செல்லும் ஆபத்தான மின்கம்பிகள் (படங்கள் இணைப்பு)

wstஅதிரை மேலத்தெருவில் தென்புறம் மேல்பக்கத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் உயர் மின்அழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாகவும் பழுதடைந்து சில நாட்களில் அறுந்து கீழே விழும் நிலையிலும் உள்ளன. இதற்கு காரணம் இரண்டு மின்கம்பங்களுக்கு இடையிலான தூரம் சற்று அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிரை மின்வாரியத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்கிறார் அந்த தெரு வாசி.

எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close