சென்னையில் வசிக்கும் அதிரையர்களுக்கு அன்பான வேண்டுகோள்

request-clipart-request-box2அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரையர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பாடுபடும் வகையிலும், சென்னையில் உள்ள அதிரையர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு உதவும் வகையிலும் Adirampattinam Development and Welfare Association (ADWA) என்ற ‘சென்னையில் வசிக்கும் அதிரையர்களுக்கான கூட்டமைப்பு’ கடந்த 1-11-2015 அன்று தொடங்கப்பட்டது.

இதில் முதல்கட்டமாக சென்னையில் உள்ள அதிரையர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் சென்னையில் வசிக்கும் அதிரையர்களின் தகவல்களை திரட்ட இருக்கின்றோம். எனவே சென்னையில் வசிக்கும் அதிரையர்கள் தங்கள் பற்றிய தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் பதியுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

https://docs.google.com/forms/d/1kyxAk_ggX2uRs2Lh57py3hSTcTQ-B3GC4UDwWPpjr1c/viewform

அதுபோல் சென்னையில் வசிக்கும் மற்ற அதிரையர்களையும் இந்த கணக்கெடுப்பில் பங்களிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். இந்த சுட்டியை தங்களுக்கு தெரிந்த அனைத்து சென்னை வாழ் அதிரையர்களுக்கும் அனுப்பி வைக்கவும்

இதில் பதியப்படும் அனைத்து தகவல்களும் பாதுகாக்கப்படும்.

சென்னையில் உள்ள கூட்டமைப்பு Adirampattinam Development and Welfare Association – ADWA குறித்த உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும், ஆலோசனைகளையும், ADWA வில் உங்களது பங்களிப்பு குறித்தும் எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

ADWA குறித்த உங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

ADWA மின்னஞ்சல் முகவரி: adwachennai@gmail.com

இப்படிக்கு,

Adirampattinam Development and Welfare Association
Chennai

Close