அதிரையில் பொறுப்பில்லாத அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் சமுக சேவகர் ஹாலிக்!

khalik maraikaஅதிரையில் கடந்த சில நாட்களில் ஆங்காங்கே அரசியல் ஆதாயத்திற்காகவும், பெயருக்காகாவும் சமுக சேவைகர்கள் என்னும் போர்வையில் உலா வரும் சுயநலவாதிகள் அதிகரித்து வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் அதிரை நடுத்தெரு கீழ்புறத்தை செர்ந்த ஹாலிக் அவர்கள் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரையில் உள்ள குறைகள் பொறுப்பில்லாமல் நடக்கும் அதிகாரிகள் மின்சார்ந்த பிரச்சனைகள், சாலை பிரச்சனைகள், சுகாதார பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை மேலதிகாரிகளுக்கு புகார் கடிதங்களாக அனுப்பி வருகிறார்.

இவருடைய புகார் கடிதங்களுக்கு பதில் கடிதங்கள் வருவதுடன் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அதிரை ஜாவியால் சாலை மாற்றப்பட்ட ஆபத்தான் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றி கம்பங்கள் ஆகியவை இவர் சமீபத்தில் அனுப்பிய புகார் கடிதங்களால் ஏற்பட்டவையாகும்.

சிறிய விசயங்களுக்கெல்லாம், தான் செய்யாத விசயங்களுக்கெல்லாம் தான் செய்தது போன்று இணையதளத்தில் பதிந்து சமுக சேவகர்கள் என்ற பெயரில் புகழ் தேடும் புகழ் விரும்பிகளுக்கு மத்தியில் இவ்வளவு ஆண்டுகாலம் தான் செய்த எந்த காரியத்தையும் வெளியில் சொல்லி விளம்பரம் தேடாமல் அமைதியாக செய்துவந்த ஹாலிக் அவர்களை அதிரை பிறை சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

இவர் சமீபத்தில் அனுப்பிய கடிதங்களும் இவருக்கு கிடைத்த பதில் கடிதங்கள் சில உங்கள் பார்வைக்கு….

h1 h2 h4 h5 h6 h7 h8 h9

Close