தொடர் வெற்றியில் அதிரை AFCC அணி! TNCA தொடரை வெல்லுமா?

அதிரை AFCC அணி தஞ்சாவூர் பீட்டர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கும் TNCA தொடரின் லீக் போட்டியில் அதிரை AFCC அணி 2வது வெற்றியை குவித்துள்ளது.

 தஞ்சாவூர் மாவட்டத்தின் தலை சிறந்த 20 அணிகள் பங்கேற்று விளையாடும் இத்தொடர் போட்டி தஞ்சை பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றில் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு ஐந்து அணிகள் விளையாடும். ஒரு அணிக்கு 4 போட்டிகலும் அதில் ஒரு பிரிவில் அதிக புள்ளிகள் பெரும் இரண்டு அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.

அந்த வகையில் அதிரை AFCC அணி இது வரை 3 லீக் போட்டிகளில் விளையாடி திருவையாறு மற்றும் தஞ்சை கிங்ஸ் கல்லூரி அணிகளுடன் வெற்றி பெற்றது. நேற்றைய தினம் கிங்ஸ் கல்லூரியை எதிர்த்து களம் இறங்கிய அதிரை AFCC அணி முதலாவதாக பேட்டிங் செய்தது இதில் அதிகபட்சமாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் முஹம்மது ஜிஃப்ரி 60 ரண்களை குவித்து அசத்தினார். இறுதியாக 25 ஓவர்கள் முடிவில் AFCC அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரண்களை குவித்தது.

161 ரண்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் கல்லூரி அணி AFCC அணி வீரர்களின் அசத்தலான பந்து வீச்சால் 77 ரண்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பரிகொடுத்தது. இதன் மூலம் அதிரை AFCC அணி லீக் சுற்றில் தனது இரண்டாவது வெற்றியை பெற்று கால் இறுதி சுற்றுக்கான வாய்ப்பை தனதாக்கிக் கொண்டது.

பந்து வீச்சில் AFCC வீரர் முஹம்மது சலீம் 4 விக்கெட்டுகளும் கேப்டன் தீனுல் ஹக் 3 விக்கெட்டுகளும் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். அடுத்ததாக BLACK SEVENS அணியுடன் நடக்கும் லீக் போட்டியில் வெற்றி பெற்றால் AFCC  அணி காலிறுது போட்டிக்கு எளிமையாக முன்னேறும். இத்தொடரில் வெற்றி பெற்றால் நமதூர் AFCC அணி TNCA தஞ்சை மாவட்ட சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும்.

இவர்கள் இத்தொடரில் வெற்றிபெற வாழ்த்துகிறது அதிரை பிறை.

Advertisement

Close