கோட்டைபட்டினம் கந்தூரிக்கு சென்று ஊர் திரும்பிய அதிரை இளைஞர்களுக்கு விபத்து

ACCIDENTநேற்று இரவு அதிரை அருகே உள்ள கோட்டைபட்டினத்தில் கந்தூரி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளிலில் திரும்பிய இளைஞர்கள் சம்பை அருகே எதிரில் வந்த மாடு ஒன்றின் மீது மோதினர். இதில் மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இளைஞர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

இரவு முழுவதும் கந்தூரியில் கலந்துக்கொண்டு அரைதூக்கத்தில் வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Close