அதிரை ஜாவியால் எதிரில் உள்ள பழைய ட்ரான்ஸ்பார்மர் தாங்கும் கம்பங்கள் உடைத்து கீழே சாய்க்கப்பட்டன! (படங்கள் இணைப்பு)

javiyal

அதிரை முழுவதும் பல பகுதிகளில் பழுதான மின் கம்பங்களை மாற்றும் பணிகள் கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அதிரையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அதிரை ஜாவியால் எதிர்புறமாக உள்ள ட்ரான்ஸ்பார்மர் தாங்கும் கம்பங்கள் பழுதடைந்து காணப்பட்டது. அதனை புதிய கம்பங்களுக்கு மாற்றும் பணி நடைபெற்றது. இதில் புதிய கம்பங்களுக்கு ட்ரான்ஸ்பார்மர் மாற்றப்பட்ட பிறகு பழைய கம்பங்கள் கீழே தள்ளி உடைக்கப்பட்டது.

மேலும் இதனால் நடுத்தெரு, கீழத்தெரு, காலியார் தெரு, கடைத்தெரு, முத்தம்மாள் தெரு, புதுத்தெரு, ஜாவியால் சாலை மற்றும் சில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

Close