பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸின் 2 ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்ற அதிரை நிர்வாகிகள் (படங்கள் இணைப்பு)

congress1பட்டுக்கோட்டை, நவம்பர் 29: ஜி.கே. வாசன் அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் சோனியா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். இதனை அடுத்து நேற்றுடன் அக்கட்சி துவங்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்து இரண்டாம் ஆண்டில் அடையெடுத்து வைக்கின்றது.

இதனை கொண்டாடும் விதமாக பட்டுக்கோட்டை ரசூல் சில்க்ஸ் எதிரில் அமைந்துள்ள வணிக வளாக மைய மைதானத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சியுடன், இரண்டாம் துவக்க விழா நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு.N.R.ரங்கராஜன் அவர்கள் கலந்துக்கொண்டு கொடியேற்றி சிறப்பித்தார். இதில் அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Close