அதிரை காலியார் தெரு வீட்டிற்குள் நுழைந்த கள்ளன்! மக்கள் பார்த்தவுடன் தப்பியோட்டம்!

theftஅதிராம்பட்டினம், நவம்பர் 29: அதிரை காலியார் தெரு பகுதியில் நேற்று இரவு மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்ட திருடன் ஒருவன் வீட்டை பூட்டுவதற்கு முன் ஆண்கள் இல்லாத ஒரு வீட்டுக்குள் நுழைந்து விட்டான். இந்நிலையில் மின்சாரம் வந்தவுடன் வீட்டு கதவை பூட்ட சென்ற பெண்மனி திருடனை பார்த்து கூச்சலிட்டார். இதனை பொருட்படுத்தாத அந்த திருடன் அந்த பெண்மனியை மிரட்டிக்கொண்டிருந்தான். தொடர்ந்து அந்த பெண் கூச்சலிட்டுக்கொண்டே இருந்ததால் வீட்டை சுற்றி கூட்டம் கூடியது.

இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட திருடன் தப்பியோடி விட்டான். இதனால் நேற்று இரவு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக அதிரை சி.எம்.பி.லேன், புதுமனைத்தெரு, நடுத்தெரு, ஆலடித் தெரு பகுதிகளிலும் திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

Close