அதிரை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் & உதவிப் பேராசிரியர் பணி!

image

MKN மதரஸா ட்ரஸ்ட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காதிர் முகைதீன் கல்லூரியில் காலியாக உள்ள தாவரவியல் (Botany), வேதியியல் (Chemistry), ஆங்கிலம் (English),  இயர்பியல்(Physics) ஆகிய துறைகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் (Aided) நிறப்பப்படவுள்ளன.

மேற்கண்ட துறைகளில் முதுகலை படிப்புடன் NET அல்லது SLET அல்லது Ph.D., ஏதேனும் ஒன்று முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாகவுள்ள பொருளியல் (Economics) முதுநிலை உதவியாசிரியர் பணிக்கு பொருளியலில் முதுகலைப் பட்டத்துடன் M.Ed. அல்லது B.Ed. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து பணிகளுக்கான விண்ணப்பங்களும் 20.12.2015க்கு முன்பாக Administrator,
Khadir Mohideen College Campus,
Adirampattinam-614701
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும் படியும்

பரிந்துரைகளுடன் வரும் விண்ணப்பங்கள் ஏற்க தகுதியற்றவை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close