அதிரையில் அவதிப்படும் காலியார் தெரு மக்கள் (படங்கள் இணைப்பு)

kaliyar stபள்ளி முடிந்து மிகவும் சிரமத்துடன் வீடுகளுக்கு செல்லும் காலியார் தெரு சிறுவர்கள்

அதிராம்பட்டினம், நவம்பர் 29: அதிரை காலியார் தெருவில் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களின் பல நாள் கோரிக்கையான புதிய கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலைகள் பெயர்து எடுக்கப்பட்டு பாதையெங்கும் மணல் குவிந்து கிடக்கின்றது. இந்த பணிகள் நிறைவடைய இன்னும் சில காலம் ஆகும் என்பதால் அதிரை காலியார் தெருவுக்கு வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த கால்வாய் சீரமைப்பு பணி எங்களுக்கு நல்லது தான் என்றாலும் சாலையெங்கும் ஒரே நேரத்தில் மணல் கொட்டப்படுவதால் அவசரத்துக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது என்றும், இதனால் சாலையில் ஓட வேண்டிய மழை தண்ணீரும் வீட்டுக்குள் புகுந்து விட்டதாகவும், இது குறித்து வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி தலைவர் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Close