Adirai pirai
POLITICS இந்தியா

கேரளாவில் இந்திய யூனியன் மகளிர் லீக் தேசிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள் இணைப்பு)

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நவம்பர் 27, 28 தேதிகளில் நடைபெற்ற இந்திய யூனியன் மகளிர் லீக் தேசிய மாநாட்டில் தேசிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.

பேராசிரியர் ஏ.கே.தஷ்ரீஃப் ஜஹான் தலைவராகவும், கேரள வழக்கறிஞர் நூர்பீனா ரஷீத் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மகளிர் அணி அமைப்பான இந்திய யூனியன் மகளிர் லீக் தேசிய மாநாடு கேரள மாநிலம் எர்ணாகுளம் டவுன் மஹாலில் நவம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெற்றது.

முதல்நாள் ஆலோசனை கூட்டமும், இரண்டாம் நாள் தேசிய மாநாடும் நடை பெற்றது. நவம்பர் 28 சனிக்கிழமை காலை 11 மணிக்.கு தொடங்கிய தேசிய மாநாட்டில் மாநாட்டின் தலைவரை தமிழக மகளிர் லீகின் இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆயிஷா முன் மொழிந்தார். புர்கான்பூர் மாநகராட்சி கவுன்சிலர் தன்வீர் கவுஸர் வழி மொழிந்தார்.

அதனைத் தொடர்ந்து இறைவசனங்கள் ஓதப்பட்டன. வழக்கறிஞர் நூர்பீனா ரஷீத் வரவேற்புரையை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநிலத் தலைவர் பாணக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

பின்னர் நடைபெற்ற அமர்வில் கொச்சி மாநகராட்சி மேயர் சௌமினி ஜெயின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய பொருளாளர் பி.கே. கு.ஞ்ஞாலி குட்டி, தேசியச் செயலாளர்கள் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., அப்துல் ஸமது ஸமதானி எம்.எல்.ஏ., நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.அப்துல் வஹாப், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், தலித் லீக் தலைவர் ஜெயந்தி, தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் இந்திய யூனியன் மகளிர் லீகின் தேசிய ஒருங்கிணைப் பாளர்களான கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தமிழக செயலாளர் வழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன் ஆகியோர் உரையாற்றினர்.

நிர்வாகிகள் தேர்தல்

இந்திய யூனியன் மகளிர் லீகிற்கான அமைப்பு விதிகள், சட்டதிட்டங்கள் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற தேசிய நிர்வாகிகள் தேர்தலில்

தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.கே. தஷ்ரீஃப் ஜஹான் தலைவராகவும், கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் நூர்பீனா ரஷீத் பொதுச் செயலாளராகவும், மகாராஷ்டிராவை சேர்ந்த அமராவதி மாநகராட்சி உறுப்பினர் ரஹீமாஅப்துல் ரபீக் பொருளாளராகவும், துணைத் தலைவராக மகாராஷ்டிர நாக்பூர் மாநகராட்சி உறுப்பினர் இஷ்ரத் நயீப் அன்ஸாரி, தென்மண்டலச் செயலாளராக வயநாடு ஜெயந்தி, மேற்குமண்டல செயலாளராக கர்நாடகத்தின் தஸ்னீம் இப்றாஹீம் சேட், மத்திய மண்டல செயலாளராக மத்தியப்பிரதேசம் புர்கான்பூர் மாநகராட்சி உறுப்பினர்தன்வீர் கௌஸர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மற்ற மண்டலங்களுக்கு பொறுப்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

ஏ.கே. தஷ்ரீஃப் ஜஹான்

இந்திய யூனியன் மகளிர் லீக் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு­ள்ள பேராசிரியர் ஏ.கே. தஷ்ரீஃப் ஜஹான் மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் வசிக்கிறார். அவருக்கு வயது 67. தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் உர்தூ மொழிகளில் சரளமாக பேச்சுத் திறமை கொண்ட இவர் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி யில் விரிவுரையாளராகவும், பின்னர் சிவகங்கை அரசு பெண்கள் மகளிர் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை ராஜாஸ் கல்லூரியில் முதல் வராகவும், அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி யில் பேராசிரியர், துறைத் தலைவர் மற்றும் முதல்வ ராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் முஸ்லிம் மகளிர் அணியின் தமிழ்நாடு மாநில செயலாளராகவும் , முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும், மதுரை மாவட்டமுஸ்லிம் பெண்கள் உதவும் சங்க செயலாளராகவும் பணி யாற்றி வருகிறார். பேராசிரியர் ஏ.கே. தஷ்ரீஃப் ஜஹான் முது பெரும் முஸ்லிம் லீக் தலைவராக விளங்கிய டார்பிடோ ஏ.கே. பாஷா அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது டார்பிடோ ஏ.கே. பாஷா நாவலர் ஏ.எம். யூசுப் அவர்களுடன் இணைந்து காரைக்காலில் முஸ்லிம் லீக் என்ற பெயரில் பத்தி ரிகை நடத்தியவர். பின்னர் நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் மிகவும் புகடிந பெற்ற மறுமலர்ச்சி வார ஏட்டை திருச்சியில் நடத்திய போது அதன் பிரதம ஆசிரியராக பணியாற்றினார்.

நூர்பீனா ரஷீத்

இந்திய யூனியன் மகளிர் லீக் தேசிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.கே. நூர்பீனா ரஷீத் கேரளாவில் 1985 முதல்சிவில், கிரிமினல் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர். குறிப்பாக திருமண வழக்குகளில் தனித்திறமை பெற்றவர். இவரது வயது 53.கள்ளிக்கோட்டை மலப்பரம்பாவை சேர்ந்த இவர் கேரள மாநில பெண்கள் ஆணையம்,சிறுமியருக்கா­ன நீதி சட்டஆணையம் போன்றவற்றில் உறுப்பினராகவும், இந்தியயூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில மகளிர் அணி பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வருபவர்

image

image

image

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy