பீஸ் பீஸ் ஆன போஸ்ட் ஆபிஸ் ரோடு! 2 ஆண்டுகளுக்குள் இந்த நிலைமையா?

image

அதிரை அல் அமீன் பள்ளி முதல் போஸ்ட் ஆபிஸ் ரோடு கடைத்தெரு வரை உள்ள நீண்ட சாலை நமதூர் மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு பிறகு பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்டு சென்ற ஆண்டு சுமாரான மழையும் இந்தாண்டு தொடர் மழையும் பெய்தது நமக்கு தெரிந்திருக்கும். இந்நிலையில் இந்த சாலை இடம் தெரியாமல் பழைய நிலைக்கு மாறிவிட்டது.

கிராணி மளிகை எதிரிலும், ஸ்டேட் வங்கி எதிரிலும், தீன் மெடிக்கல் எதிரிலும் உள்ள சாலை குண்டும் குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிண்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர். புதிய சாலை அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கூட பூர்த்தியாக நிலையில் இந்த சாலை இடம் தெரியாமல் உருக்குலைந்து போய் இருப்பதை பார்க்கும் போது எங்கோ முறைகேடு நடந்துள்ளது மட்டும் உறுதியாகின்றது.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close