அதிரையில் இருட்டு வானில் முரட்டு மேகங்களுடன் மிரட்டும் மழை! (படங்கள் இணைப்பு)

irutuதமிழகமெங்கும் கடந்த 5 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதிரையிலும் கடந்த நான்கு நாட்களாக மழை விடாமல் பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து மெயின் ரோட்டில் கடை நடத்தி வரும் சுகுமார் அவர்கள் நம்மிடம் கூறுகையில் “மழை தொடர்ந்து பெய்து வருவதால் என்னுடைய தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும் கடையை வேலைக்கு திறக்க முடியவில்லை. மழையினால் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுவதால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. மற்ற மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறைவிட்டாலும் நம்ம தஞ்சை மாவட்டத்துக்கு விடுமுறை விடாத காரணத்தால் மிகவும் சிரமத்துடன் என் பிள்ளைகள் பள்ளிக்கு செல்கின்றார்கள்” என்றார்.

படங்கள்: அஹமது ரஷீத் (அதிரை பிறையின் மாணவ பத்திரிக்கையாளர்)

Close