சென்னையில் பரிதவிக்கும் அதிரை மாணவர்கள்!

STUDENTS ADIRAI

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நமது சிங்கார சென்னை அசிங்கார சென்னையாக மாறியுள்ளது. எங்கு சென்றாலும் தண்ணீராக இருப்பதால் தலைநகர வாசிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத மழை பொழிவு இந்தாண்டு பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாலும் ஏ.எம்.எஸ், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றில் படிக்கும் அதிரை மாணவர்கள் ஊர் திரும்புவதற்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் பல பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நமதூர் மாணவர்கள் கல்லூரிக்கும் செல்ல முடியாமல் அதிரைக்கும் வர முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

Close