அதிரையர் மீது மோதி தூக்கி எறிந்து சென்ற தனியார் பேருந்தை மறித்த அதிரையர்கள்! காவல் நிலையம் அருகே பரபரப்பு (படங்கள் இணைப்பு)

hmtஅதிரை கடற்கரைத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவர் இன்று இரவு ECR சாலையில் இருந்து கடற்கரைத் தெருவை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து பாபா பக்ருதீன் மீது மோதியது.இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.மேலும் அந்த நபரை பேருந்தில் ஏற்றி பழஞ்செட்டித் தெரு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு வேகமாக சென்று விட்டனர் .இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இளைஞர்கள் அந்த பேருந்தை பிடிக்க சென்றனர் .அப்போது அந்த பேருந்து எந்த நிறுத்ததிலும் நிற்காமல் சென்று விட்டது.

உடனே பாபா பக்ருதீன் அவர்களை பழஞ்செட்டித் தெரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று காலை அதிரைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அந்த தனியார் பேருந்தை பொதுமக்கள் காவல் நிலையம் அருகே மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் இந்த விசயத்தில் தலையிட்டு பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்வதாக உறுதியளத்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

Close