சென்னை விமான நிலையத்துக்கு மாற்று விமான நிலையம் ஏற்பாடு!

அரகொனம்

ரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் அரக்கோணம் அருகே உள்ள ராஜாளி விமானப் படைத் தளம் இன்று முதல் தற்காலிக விமான நிலையமாக செயல்பட உள்ளது.

சென்னையில் இடைவிடாது வெளுத்து வாங்கிய மழையால் சென்னை விமான நிலையத்தில் ஓடு தளம் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதையடுத்து விமான நிலையம் வரும் 6ந்தேதி மதியம் 12 மணி வரை மூடப்பட்டுள்ளது.

விமான நிலையம் எப்போது செயல்படும் என்பது வானிலையை பொருத்தே அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு விமான போக்குவரத்து முற்றிலும் முடங்குவதை தவிர்க்க அரக்கோணம் அருகே உள்ள ராஜாளி விமானப் படைத் தளம் தற்காலிக விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

இன்று முதல் அங்கிருந்து பயணிகள் விமானம் இயக்கப்படும் என விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்றிரவு ஏர் இந்தியாவிற்கு சொந்தமான ஏர்பஸ் 320 ரக விமானம் சோதனை முறையில் ராஜாளி விமான படைத் தளத்தில் தரை இறக்கப்பட்டது.

Close