குப்பை கொட்டும் மேடாக மாறிய தக்வா பள்ளியின் நடுத்தெரு வாயில் (படங்கள் இணைப்பு)

thans

திரை தக்வா பள்ளி நடுத்தெரு வாயில் அப்பகுதியினரின் குப்பை கொட்டும் மேடாக மாறிவிட்டது. இந்த பகுதியில் தாம் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. வீட்டில் சேரும் குப்பைகளை மக்கள் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்காமல் இங்கு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனை நாளொன்றுக்கு ஏராளாமான பொதுமக்கள், மாணவ மானவிகள், பள்ளிக்கு தொழுகைக்கு வரும் தொழுகையாளிகள் என பலர் கடந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் அதிகளவில் கொட்டப்படும் இந்த குப்பைகளால் கடுமையான துர்நாற்றமும், கொசுத்தொல்லையும் ஏற்படுகின்றது. இதற்கு காரணம் பொதுமக்களின் சுயநலமும், பேரூராட்சியின் அலெட்சியமுமே என்கின்றனர் இதனால் அவதியடையும் மக்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேருராட்சி தலைவரால் தனியார் நிறுவனம் மூலம் குப்பைகள் சேகரிக்கும் திட்டம் துவங்கிய சமயத்தில் இந்த குப்பைகள் சேர்வது குறைவாக இருந்தது. நாளடைவில் இந்த குப்பைகள் வாங்கும் திட்டமும் நலிந்து போக மீண்டும் குப்பைகள் சேர ஆரம்பித்து விட்டன.

பல முறை பதிவுகள் பதிந்தாலும் முதல் வாரம் இந்த பிரச்சனை இல்லாமல் இருக்கும், அடுத்த வாரம் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. இவை அனைத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் இந்த பிரச்சனை நீங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Close