அதிரையில் SDPI கட்சி நடத்த இருந்த மக்களை சந்திப்போம் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

ஸ்ட்பியைகடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் டிசெம்பர் 13 வரை SDPI கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி அவர்களின் மாநிலம் தழுவிய மக்களை சந்திப்போம் என்னும் பிரச்சார பயணம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன ஒரு அங்கமாக தஞ்சை தெற்கு மாவட்ட பகுதிகளில் வரும் 7ம் தேதி இந்த மக்களை சந்திப்போம் பயணம் நடைபெற உள்ளது.

இதில் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் முதல் கட்டமாக மந்திரிப்பட்டினத்தில் காலை 10 மணியளவில் துவங்கும் இந்த பயணம் வரவேறுப்பு மற்றும் கொடியேற்றத்துக்கு பிறது, செந்தலைப்பட்டினம், சம்பைப்பட்டினம், சேதுபாவாச்சத்திரம்,  மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், கொள்ளுக்காடு பட்டுக்கோட்டை, வீரக்குறிச்சி, ஒரத்தனாடு, தஞ்சை இபி காலனி, கீழவாசல், ஜங்சன், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் கொடியேற்றம் உரை உள்ளிட்டவற்றை முடித்துக்கொண்டு கடைசியாக மாலை 6 மணியளவில் அதிராம்பட்டினத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார். என அறிவிப்பு செய்யப்பட்டு இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்டுள்ள வெள்ள மீட்பு பணிகளில் SDPI கட்சியினர் பலரும் ஈடுபட்டுள்ளதால் இந்த இரண்டாம் கட்ட மக்களை சந்திப்போம் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

Close