சென்னை வெள்ளம் : களமிறங்கிய சோயிப் அக்தர்

இந்தியாவில்
உள்ள தமிழகத்தின்
பலபகுதிகளில் பெய்துள்ள
கனமழையால், அங்கு மக்கள்
கடும்
பாதி்ப்பிற்குள்ளாகியுள்ளனர்.
அவர்களுக்கு உள்ளூர் மக்கள் என
பல்வேறு தரப்பினர் உதவிவரும் நிலையில்,
எனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களாகிய
நீங்களும் உதவ வேண்டும் என்று
கேட்டுக்கொள்வதாக பாகிஸ்தான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர்
கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட
வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு
அக்தரின் டுவிட்டர் பக்கத்தின் மூலம் பலர்
உதவியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: dinamalar

Close