அதிரையில் சென்னையை விட அதிகனமழை பெய்யும்! அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை பதிவு!

irutuகடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக சிங்கார சென்னை சின்னாப்பின்னமாக மாறியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை முதல் அதிராம்பட்டினம் வரை 60 முதல் 120 மி.மீ மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை வாசிகள் எந்த அத்தியாவசியங்களை இழந்து தவித்தார்கள் என்பதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு முக்கிய தேவைகளான உணவு, பால், தண்ணீர், செல்போன் சார்ஜ், விளக்கு, எறி பொருள், வெதுவெதுப்பான ஆடைகள், உள்ளிட்டவற்றை முன்கூட்டியே சேகரித்துக் கொள்ளுமாறும் சிக்கலான சூழல்களை சமாளிக்க இவற்றை கையாளுமாறும் அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்வதோடு அனைவரும் இதிலிருந்து பாதுகாக்க துஆ செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Close