சவுதி ஜித்தாவில் இந்திய பணியாளர்களுக்கான புதிய உதவி மையம்!

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கான உதவி மற்றும் ஆலோசனை மையம் ஜித்தா ஷரஃபிய்யாவில் உள்ள இம்பாலா கார்டனில் நேற்று (07/12/2014 – சனிக்கிழமை) திறக்கப்பட்டது. 

இந்த உதவி மையத்தில் இந்திய பணியாளர்களுக்கு விசா, பாஸ்போர்ட், கஃபீல் சிக்கல், அல்லது பணி செய்யும் இடத்தில் சிக்கல், உடல்நல குறைபாடு, அல்லது வேறு சம்மந்தமான தொழிலாளர் பிரச்சினைகளுக்கு ஆலோசனைகள் வழக்கப்படும்.

இந்த உதவி மையம் ஒவ்வொரு வாரம் புதன் கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இயங்கும். இந்த நேரத்திற்க்குள் இவ்வுதவி மையத்தை நீங்கள் அனுகி உங்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement

Close