அதிரையர்களுக்கு ஒரு எச்சரிக்கை! செல்லிக்குறிச்சி ஏரி நிறைந்து ஊருக்குள் வேகமாக வரும் வெள்ளம்! (படங்கள் இணைப்பு)

ghஅதிரை அருகே உள்ள செல்லிக்குறிச்சி ஏரி கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கண மழை காரணமாக வேகமாக நிரம்பி அதன் முழு கொள்ளளவை தாண்டியது, இதனை அடுத்து இன்று காலை அந்த ஏரியில் இருந்து உபரி நீர் வேகமாக வெளியேறி பட்டுக்கோட்டை-அதிரை சாலை வழியாக செல்லும் வாய்க்காலில் ஆர்ப்பரித்து செல்கிறது. இதில் வாய்க்காலின் பல பகுதிகளிலும் கிளை வாய்க்கால்களிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள தோப்புகள், நிலங்கள், மைதானங்கள் ஆகியவற்றுக்குள் தண்ணிர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மேலும் இந்த தண்ணீர் அதிரை கரிசல்மணி குளத்தினை வேகமாக நிறைத்து வருவதால் குளமும் அதன் முழு கொள்ளளவை எட்டும் அபாயத்தில் உள்ளது. அது போன்று வெள்ளக்குளத்திலும் தண்ணீர் நிரம்பி சி.எம்.பி.லேன் பகுதிகளுக்கு வெள்ளம் நுழைய வாய்ப்புகள் அதிகமுள்ளது. இது குறித்து வெள்ள பாதிப்பு பகுதிகளை தாசில்தார், மாவட்ட ஆட்சியர் சுப்பையன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் ஆய்வு செய்தனர். ஏற்கனவே செல்லிக்குறிச்சி ஏரியில் இருந்து வெள்ளம் அதிரையை எட்டியுள்ளதால் அதிரை சி.எம்.பி லேன் பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

படங்கள் மற்றும் செய்தி: பிலால் மற்றும் நூருல்(அதிரை பிறை)

Close