அதிரையில் 35.5 மில்லி மீட்டர் மழை பொழிவு!

Adirai Salih - Rain In Adirai (7)தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழைபெய்து வருதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்குவது அதிகரித்து வருகிறது. இதுவரை 400 எக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில் தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு மழைதூறல் காணப்பட்டது. நள்ளிரவுக்கு பின்னர் மழை இன்றி காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணிஅளவில் மழை பெய்யத்தொடங்கியது. இந்த நிலையில் 11.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது மழை கொட்டியது. அதன் பின்னரும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

400 எக்டேர் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, வல்லம், அய்யம்பேட்டை, மஞ்சளாறு, திருவிடைமருதூர், அணைக்கரை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, மதுக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடிசெய்யப்பட்டுள்ளன. இதில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை சுமார் 350 எக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்குவது அதிகரித்து வருகிறது. நேற்று இது 400 எக்டேராக அதிகரித்தது.

நெற்பயிர்கள் அழுகின

மேலும் 64 எக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்துள்ளன. தண்ணீர் தேங்கிய வயல்களில் நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கிய வயல்களில் நெற்பயிர்கள் அழுகி காணப்படுகின்றன. இதனால் எவ்வளவு எக்டேரில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என்பதை கணக்கிட முடியவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழைநீர் வடிந்தால் தான் எவ்வளவு எக்டேர் பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வரும். தொடர்ந்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் மழைநீர் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

மழைஅளவு

தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம் 35.5, கும்பகோணம் 15, பாபநாசம் 14.2, தஞ்சாவூர் 6, திருவையாறு 15, திருக்காட்டுப்பள்ளி 17, வல்லம் 10, கல்லணை 7.6, அய்யம்பேட்டை 36, திருவிடைமருதூர் 19.2, மஞ்சளாறு 26.4, பூதலூர் 7.2, வெட்டிக்காடு 10, ஈச்சன்விடுதி 21, ஒரத்தநாடு 7.7, மதுக்கூர் 16, பட்டுக்கோட்டை 20, பேராவூரணி

படம்: அதிரை சாலிஹ் (அதிரை பிறை)

Close