அதிரையில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ள CBD தஞ்சை மாவட்ட துவக்க விழா!

kkkkஇன்ஷா அல்லாஹ் வருகின்ற (12-12-2015) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் CRESCENT BLOOD DONORS தஞ்சை மாவட்ட துவக்க விழா இறைவனின் துணையுடன் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சி CBD மாவட்டத் தலைவர் பேரா.K.செய்யது அஹ்மத் கபீர் அவர்களின் தலைமையிலும் ,CBD மாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரு.ஜெம்ஸ் நிர்வாக அலுவலர்,மீனாட்சி மருத்துவமனை ,தஞ்சாவூர் ,திரு.செங்கமலக்கண்ணன், காவல் துணை கண்காணிப்பாளர் , ஒரத்தநாடு,மற்றும் ஜனாப்.முஹம்மத் இப்ராகிம் ஒருங்கிணைப்பாளர் பாசமலர் வெல்ஃபேர் அசோசியேஷன் அய்யம்பேட்டை ஆகியோர் கலந்து கொண்டு இரத்ததானம் குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

ஆகையால் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள்,இரத்ததான கொடையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அழைப்பின் மகிழ்வில்,
CBD தஞ்சாவூர் மாவட்டம்,

Close