அதிரையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

school leaveஅதிராம்பட்டினம், டிசெம்பர் 08: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு  கனமழை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென் மாவட்டங்களில் பல பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர்.

சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்கால், கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Close