சென்னையில் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மீண்டும் கொட்டித்தீர்க்கும் மழை!

tttசென்னை, டிசெம்பர் 09: 2 நாட்கள் இடைவெளிக்கு பிறகு சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத வகையில் கடந்த வாரம் கொட்டிதீர்த்த கனமழை சென்னையை சின்னாபின்னமாக்கியது. அதன் பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்குள் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது ஆறுதல் அளித்தாலும் 2 நாள் இடைவெளியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கிருப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகியவற்றை தவிர்த்து பிற கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Close