அதிரையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த M.L.A.ரங்கராஜன் (படங்கள் இணைப்பு)

nhஅதிராம்பட்டினம், டிசெம்பர் 09: அதிரையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அதிரையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பல மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு N.R.ரங்கராஜன் அவர்கள் பிலால் நகர், மேலத்தெரு சானாவயல் பகுதிகளை பார்வையிட்டார். இதில் பிலால் நகர் பகுதியில் தான் அறிவித்துள்ள புதிய சாலை அமைப்பு பணிகளை விரைந்து துவங்க உள்ளதாக உறுதியளித்தார்.

Close