அதிரை மேலத்தெரு சாணாவயல் பகுதியை சுழ்ந்த மழை நீர்! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள் இணைப்பு)

gnஅதிராம்பட்டினம், டிசெம்பர் 09: அதிரையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அதிரையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பல மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல குடிசை வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனை அடுத்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு N.R.ரங்கராஜன் அவர்கள்  மேலத்தெரு சானாவயல் பகுதியை பார்வையிட்டார்

இந்நிலையில் பொதுமக்கள் MLA  வின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் அடுத்து மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்த ரங்கராஜன் விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததனை அடுத்து முற்றுகை கைவிடப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் மூட்டு அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் மக்கள் வெளியில் செல்லமுடியாமல் உள்ளனர். அதுமட்டுமின்றி பல தொற்று நோய்கள் பரவுகின்ற அபாயமும் இதில் உள்ளது.

Close