கணவன் கைவிட்டாலும் குடும்பத்தை கைவிடாமல் ஆட்டோ ஓட்டி காப்பாற்றும் வீரப் பெண்மனி!

thanjavur
ஞ்சாவூர் சீதா நகரை சேர்ந்தவர் சித்ர கலா. தஞ்சாவூரில் மகளிர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவருடைய வயது 50. இவருக்கு திருமணமாகி இளம் வயதிலேயே குடும்ப பிரச்சனை காரணமாக கணவர் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். குழந்தைகள் ஏதும் இல்லை. இருப்பினும் மறுமனம் செய்துகொள்ள மனமில்லாத சித்ர கலா மீது குடும்பத்தை தனி பெண்ணாக இருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் இவர் தன்னுடைய வயதான தாய்க்கு உணவு உடை மற்ற செலவுகளுக்கும், தனக்கான செலவுகளுக்கும், கடன் தொகையினை கழிப்பதற்கும் பணம் தேவைப்பட்டது. இதற்காக வேலை, வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க எண்ணிய இவருக்கு உதித்தது தான் இந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் வேலை. இவர் தற்போது லீசுக்கு ஆட்டோவை ஓட்டி வருகிறார். இது குறித்து இவர் கூறும்போது பெண்கள் ஆட்டோவில் பிற பெண் பயணிகள் நிம்மதியாக அச்சமின்றி வருகின்றனர்.

குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இந்த ஆட்டோவை லீசுக்கு ஓட்டி வருகின்றேன் என தைரியமாக சொன்னார். இவருடைய பேச்சிலேயே தன்னம்பிக்கையின் வார்த்தைகள் உதிர்வதை நம்மால் காணமுடிகின்றது.

தங்களுக்கு ஏதாவது துக்கமான, சங்கடமான செயல்கள் நடந்துவிட்டால் மிகவும் மனம் உடைந்து தவறான முடிவுகளை தேடிக்கொள்ளும் பல பெண்களுக்கு மத்தியில் சித்ர கலா தன்னம்பிக்கையின் தனி உருவமாக திகழ்கின்றார்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

தகவல்: ஷாஃபி

Close